முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      சினிமா
Sangeetha 2022-05-22

Source: provided

திருவனந்தபுரம் : தமிழ் திரையுலகின் முன்னணி பாடகி சங்கீதா சஜித் உடல்நலக் குறைவால் திடீர் மரணமடைந்தார்.

கேரளாவைச் மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை உட்பட பல்வேறு ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவரின் தனித்துவ குரலால் ரசிகர்களை கவர்ந்து இவரின் பாடல்கள் மூலம் அனைவரையும் தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.

கர்நாடக இசைக் கலைஞராகவும் அறியப்பட்ட சங்கீதா சஜித், முன்னணி இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நேற்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 46.  இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து