முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்

திங்கட்கிழமை, 23 மே 2022      தமிழகம்
Train 2022-05-23

Source: provided

மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளா பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின் வியாபார தேவைக்கென போடி - மதுரை இடையிலான ரயில் போக்குவரத்து கடந்த 1928-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ஓட தொடங்கியது. போடி, தேனி, ஆண்டிபட்டி மட்டுமின்றி மதுரை வரை வழியோர ஊர்கள், உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி பகுதி மக்கள், மாணவர்கள், அரசு, தனியார் வேலைக்கு செல்வோருக்கும் உதவிகரமாக இருந்தது. குறைந்த கட்டணத்தில் ஏலக்காய், பழங்கள், காய்கறிகள், இதர விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் இறுதியாக 2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தண்டவாளங்களைப் பிரித்து எடுத்து, பிற ஊர்களைப் போன்று அகல ரயில் பணி முடிந்தது. மதுரை - போடிக்கு விரைவில் ரயில் ஓடும் என, தேனி மாவட்டம் மற்றும் செக்கானூரணி, உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும், அது, சீக்கரமாக நடக்கவில்லை.

இந்நிலையில், சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான மதுரை - போடி அகல ரயில்பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்து பணிகளும் தற்போது முடிந்துள்ளன. ஏற்கெனவே மதுரை - உசிலம்பட்டி 37 கி.மீ., துாரத்தை ஜனவரி 2020-ல் பாதுகாப்பு ஆணையர் மனோகரனும், உசிலம்பட்டி - ஆண்டிபட்டி 21 கி.மீ., பாதையை டிசம்பர் 2020-ல் அபய்குமார் ராய் என்பவரும் ஆய்வு செய்தனர்.

மதுரை - ஆண்டிபட்டி ரயில் சேவை தொடங்க இரு முறை அட்டவணை வெளியான நிலையிலும், சில நிர்வாக காரணமாக ரயில் இயக்கம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், ஆண்டிபட்டி - தேனி 17 கி.மீ., துாரத்தை மார்ச் 2022-ல் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் மதுரை- தேனிக்கு ரயில் சேவை தொடங்கலாம் என அனுமதி அளித்தார். இதன்படி, ரயில் இயக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதற்கிடையில், மதுரை - தேனிக்கு முதல் கட்டமாக ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் பிரதமர் மோடி மே 26-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் வைத்து மதுரை- தேனி ரயில் சேவை தொடங்கி வைக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகமும் மேற்கொண்டுள்ளது.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை - தேனி இடையே மே 26 முதல் ரயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை மாவட்ட மக்கள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, ''மதுரை- தேனி இடையே அனைத்துப் பணிகளும் முடிந்து, ரயில் ஓட்டுவதற்கு தயார் நிலையில் இருந்தோம். பிரதமர் சென்னையில் வைத்து ரயில் சேவையை 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். தேனி - போடி இடையே 15 கிலோ மீட்டருக்கு பணி நடக்கிறது. விரைவில் அதுவும் முடிந்துவிடும். மேலும், மதுரை - போடிக்கு மின்சார ரயில் இயக்க அனுமதியும் கிடைத்துள்ளது. மின்மயமாக்கல் பணி விரைவில் தொடங்க இருக்கிறது'' என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து