முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்? இன்று முதல் பிளே-ஆப் சுற்று: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

திங்கட்கிழமை, 23 மே 2022      விளையாட்டு
Gujarat-Rajasthan 2022-05-2

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

பெங்களூரு தகுதி...

15-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே நகரில் நடைபெற்றன. மும்பையில் 3 மைதானங்களிலும், புனேவில் ஒரு மைதானத்திலும் லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிவடைந்தன. கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த ஆட்டத்தில் டெல்லியை மும்பை வென்றதால் பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெற்றது.

ஆறு அணிகள்...

குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. மும்பை இந்தியன்ஸ், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. 

முதல் தகுதிச்சுற்று...

இந்நிலையில் இன்று முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. மே 24-ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு நேரடியாக முன்னேறும்.

எலிமினேட்டர்... 

25-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். 27-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில், முதல் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும். இதில்வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். 29-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2-வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!