முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் போர் விமானம் விழுந்து விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      உலகம்
Iran 2022-05-24

Source: provided

டெக்ரான் : ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். 

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் போர் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயற்சி விமானிகள் இருவர் உயிரிழந்தனர். 

விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணையை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. ஈரானில், விமானப்படை விமானங்கள் முறையான பராமரிப்பின்றியும் மிகவும் பழமையானதாகவும் உள்ளது.

இதனால், அங்கு இத்தகைய விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் எப் 5 ரக போர் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் 3 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!