முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் கோவில் தக்கார் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : மாரடைப்பால் மரணமடைந்த ராமேஸ்வரம் கோவில் தக்கார் குமரன் சேதுபதி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் குமரன் சேதுபதி (வயது 56). இவர் ராமநாதபுரத்தில் உள்ள கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். மதுரை தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மன்னர் குமரன் சேதுபதி காலமானார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமநாதபுரம் ராமவிலாசில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் மாலை வைத்து மரியாதை செய்தனர். மேலும் இவரது உடல் இன்று மாலை 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

இராமநாதபுரம் இளைய மன்னரும், ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி இன்று(நேற்று) காலை மாரடைப்பால் காலமான செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திருக்கோயில், கல்விநிறுவனப் பொறுப்புகளில் சிறப்பாகச் சேவையாற்றி வந்த அவரது இந்த திடீர் இறப்பு ஈடுசெய்ய முடியாததாகும். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து