முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      இந்தியா
WhatsApp 2022-05-24

Source: provided

புது டெல்லி : வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அச்சேவைகளை வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.

கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது. இந்நிலையில் அச்செயலி வழங்கும் சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே மக்கள் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது., சீரான நிர்வாகத்தை உறுதி செய்யும் நோக்கில் அரசின் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி செயலியில் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.

அச்சேவைகளை வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலமாக அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெற்றுவிட முடியும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து