முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு

புதன்கிழமை, 25 மே 2022      உலகம்
Tetros 2022-05-25

Source: provided

லண்டன் : உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவரது பதவிக் காலம் முடிந்த நிலையில், 2-வது முறையாக அவர் மீண்டும் போட்டியிட்டார். 

இந்நிலையில், டெட்ரோஸ் அதனோமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால், அவர் மீண்டும் இந்த அமைப்பின் தலைவராகி உள்ளார். அடுத்த 5 ஆண்டுக்கு அவர் தலைவராக செயல்படுவார்.  

கொரோனா வைரஸ் தொற்றின் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உலக நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உலக சுகாதார அமைப்பை டெட்ரோஸ் திறம்பட வழிநடத்தினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ள டெட்ரோஸ் அதனோமுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!