முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு மாணவர்கள் நன்றி சொல்ல வேண்டும் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
Yogi 2022 03 26

Source: provided

லக்னோ : மாணவர்கள் பிரதமர் மோடிக்கு அவர் தொடங்கியுள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் என்பதால் மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று செய்தித்தாள்களை தவறாமல் படிக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை வழங்கியுள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மாணவர்கள் பிரதமர் மோடிக்கு அவர் தொடங்கியுள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும்.

செய்தித்தாள்களை படிப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பீர்கள். மாநில அரசின் அப்யுதயா திட்டம் மாணவர்கள் அவர்கள் எழுதத் திட்டமிட்டுள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குச் சித்தப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து