முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிட கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசு தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம்  ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகிய படைப்புகளுக்கான பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவர்களின் சிறந்த படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதோரின் சிறந்த படைப்பையும் சேர்த்து மொத்தம் 11 படைப்புகளை தேர்வு செய்து, அப்படைப்புகளுக்கு ரூ.50,000 பரிசுத்தொகையாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த  பரிசுத்  தொகையானது 2022-2023-ஆம் நிதியாண்டு முதல் ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!