முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மக்களுக்கு உதவ தமிழக போலீசார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஜி.பி. வழங்கினார்

புதன்கிழமை, 6 ஜூலை 2022      தமிழகம்
CM-1 2022-07-06

Source: provided

சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது. இந்த நிதிக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என இலங்கை முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது. 

இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் ரூ. 1.34 கோடியும் இந்திய போலீஸ் பணி அதிகாரிகள் சங்கம் சார்பில் ரூ. 6.63 லட்சமும் என மொத்தம் ரூ. 1.40 கோடி நிதி பெறப்பட்டது.

இந்த நிதிக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார். அப்போது அருகில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி. முகமது ஷகில் அக்தர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!