முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Triple-jump 2022-08-07

Source: provided

பர்மிங்ஹாம் : இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றது. இந்திய வீரர்கள் எல்தோஸ் பால் 17.03 மீ., அப்துல்லா அபுபக்கர் 17.02 மீ. தூரமும் ஈட்டி எறிந்துள்ளனர்

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 5-வது இடத்தியல் நீடிக்கிறது.

10-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நேற்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் எல்டோஸ் பால் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கடந்த முறையே தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து