முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துவரிமான் ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Sellur-Raju 2022-08-09

Source: provided

மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

ஆடி மாதம் என்றாலே மிகவும் விசேஷமான ஒரு மாதமாக பார்க்கப்பட்டு வரக்கூடிய வேளையில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய கோவில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.ஆடி மாதத்தின் போது அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷமான ஒன்றாக பார்க்கப்பட்டு வரக்கூடிய வேளையில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துவரிமான் பகுதியில் 80 ஆண்டுகள் பழமையான சக்தி மாரியம்மன் கோவில் இருந்து  வருகிறது.

ஆடி மாதமான இந்த மாதத்தில் கடந்த 10 நாட்களாக ஆடி மாதவிடாய் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு வருடங்களாக தொற்று பரவல் காரணமாக எந்த ஒரு விழாவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு துவரிமானை  பூர்வீகமாகக்கொண்ட மக்கள் மற்றும் அருகில் இருக்கக்கூடிய பிற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனுதினமும் இங்கு வந்து வழிபாடு நடத்தி சென்று கொண்டிருக்க கூடிய வேளையில்இன்று பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக மாபெரும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கோவில் அருகிலேயே பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 500 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமர்ந்து உணவருந்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாபெரும் அன்னதானத்தை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, அவரது துணைவி ஜெயந்திராஜூ மற்றும் பேரன் வருண்சாகர் ஆகியோருடன் கலந்து கொண்டு ஸ்ரீ சக்தி மாரியம்மனை வழிபட்ட பிறகு இந்த மாபெரும் அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.நிர்வாகிகள் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, பா.குமார், பரவைராஜா, துவரிமான் கந்தசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தானத்தில் சிறந்தது அன்னதானம்  என்றும் மிகவும் பழமையான சக்தி வாய்ந்த இந்த மாரியம்மனை எந்த வித பேதமும் இன்றி பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் வந்து சுவாமியே தரிசனம் செய்து மாரியம்மன் அருள் பெற்று செல்கின்றனர்.இந்த நிலையில் இன்று இந்த மாபெரும் அன்னதானத் திட்டத்தை துவக்கி வைக்க எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து