முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-2 2022-08-10

Source: provided

சென்னை : நடந்து முடிந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது.  இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணியும் என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஏ அணி (பெண்கள்) ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத் தொகையாக தலா ஒரு கோடி‌‌ ரூபாய் வழங்கி தமிழக அரசு சிறப்பிக்கும். இவ்வாறு அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து