எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த வழக்கில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்தது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது அ.தி.மு.க. சார்பிலும், அதன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மூத்த வக்கீல் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜ கோபால், நர்மதா சம்பத், இன்பதுரை ஆகியோர் ஆஜரானார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், திருமாறன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.
அப்போது நீதிபதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி தகுதி வாய்ந்த நபர்களால் கூட்டப்பட்டதா, இல்லையா என்பது குறித்து இரு தரப்பு வக்கீல்களும் வாதிட வேண்டும் என்று கூறினார். அதன்படி இரு தரப்பு வக்கீல்களும் நேற்று முன்தினம் வாதாடினார்கள்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்ததை ரத்து செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு சரமாரி கேள்விகளை கேட்டார். அதன் பிறகு இந்த வழக்கை வக்கீல்கள் வாதத்துக்காக நேற்று தள்ளி வைத்தார்.
இதையடுத்து அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை நேற்று 2-வது நாளாக நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் ஆஜராகி வாதம் செய்தார். அவர் வாதாடும் போது கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இது சம்பந்தமான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23-ந் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27-ந்தேதியே தயாரிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜூன் 23-ந் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை. 23 வரைவு தீர்மானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் வாதாடினார்.
அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், "ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதி ஆனது" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் விஜய் நாராயண் பதில் அளித்து வாதாடியதாவது:-
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன. அதற்கு பதிலாக 2017-ம் ஆண்டு நியமனத்தை எடுத்துக்கொள்ள முடியாது.
இரட்டை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமைதான் தேவை என்பது ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் போது, பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம். ஆனால் ஐகோர்ட்டு தடை உத்தரவு காரணமாக அன்று அதை நிறைவேற்ற முடியவில்லை.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் செயல்பட வேண்டும். இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமை கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பார்கள் என்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் போல, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை. ஏனென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் திருத்த விதிகளின்படி நடத்தப்பட்டது. அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை.
ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று கூற முடியாது. ஜூன் 23-ந் தேதி கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நோட்டீஸ் தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் நோட்டீஸ்.
2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர். ஒருவரின் சூழலை தனியாக பார்க்காமல் ஒட்டு மொத்த கட்சியின் நிலையைதான் பார்க்க வேண்டும் மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வில்தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.
எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கியே செல்கின்றன. எனவே ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் ஒட்டுமொத்த கட்சிகளின் நலனை பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் வாதாடினார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடும் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக எந்த தீர்மானமும் ஜூன் 23 பொதுக்குழுவில் முன் வைக்கப்படவில்லை. காலி இடத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க. தலைமை இடத்தை பிடிக்க முயன்றனர் என வாதிடப்பட்டது.
அப்போது பெரும்பான்மையான உறுப்பினர்களின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை மட்டும் வைத்து ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது.பொதுக்குழு குறித்து தொலைகாட்சி, பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது. முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இருதரப்பு ஆவணங்களை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.