எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தேசிய கொடி ஏற்றினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சென்னை ஐகோர்ட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நேற்று தேசிய கொடியை ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் எஸ்.துரைசாமி, டி.ராஜா உள்ளிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் சென்னை ஐகோர்ட்டு கட்டிடம் கட்டப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஐகோர்ட்டு கட்டிடம் பொறிக்கப்பட்ட தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வெளியிட மூத்த நீதிபதி எஸ்.துரைசாமி பெற்றுக் கொண்டார். .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |