முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Anna-University 2021 07 28

2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 

மேலும், இரண்டாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 21-ம் தேதி முதல் பருவத்தேர்வு நடைபெறும் என்றும் பருவத்தேர்வு முடிந்து ஜனவரி 23-ம்தேதி மீண்டும் கல்லூரிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மறுபக்கம், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில் தோ்ச்சி விகிதம் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.  அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை, தோ்ச்சி விகிதம் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது பொறியியல் கலந்தாய்வின் போது, தரமான கல்லூரிகளை தோ்வு செய்ய மாணவா்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கிடையே, நிகழாண்டு பொறியியல் கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.  

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வுகளில் மாணவா் தோ்ச்சி விகித அடிப்படையில் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. பல்கலை.யின் கீழ் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசையில், அரசு கல்லூரிகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. தனியாா் கல்லூரிகளே முன்னிலை வகிக்கின்றன.    2021-ம் ஆண்டு நவம்பா் பருவத் தோ்வில் 3 கல்லூரிகளில் ஒரு மாணவா் கூட தோ்ச்சி பெறவில்லை. கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/  என்ற இணையதளம் வழியாக மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். கொரோனா பரவல் காரணமாக முந்தைய ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கு இணைய வழியில் தோ்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து