எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்தில், செப்.16-ம் தேதி நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கபடி போட்டியின்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், கழிப்பறையின் வாசல் ஒன்றில் சிறுநீர் கழிக்கும் கோப்பைகளுக்கு அருகில் சாதம், குழம்பு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து கேமரா அந்தக் கழிப்பறையையும், அங்கிருக்கும் சிறுநீர் கோப்பைகளையும் காட்டுகின்றது.
கூடவே, கழிப்பறையின் தரையில் ஒரு தாளின் மீது திறந்தநிலையில் பூரி வைக்கப்பட்டுள்ளதும் காட்டப்படுகின்றது. வீராங்கனைகள் அவற்றில் இருந்து தேவையான உணவுகளை தட்டில் எடுத்து வைத்துச் சாப்பிடுகின்றனர். இரண்டாவது வீடியோ ஒன்றில், தொழிலாளர்கள் வெளியே நீச்சல் குளத்தின் அருகில் சமையல் செய்த இடத்தில் இருந்து பாத்திரங்களை எடுத்து வருவது காட்டப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, ஆளும் பாஜக அரசு கபடி வீராங்கனைகளை அவமானப்படுத்திவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
டி-20 தரவரிசையில் மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
டெர்பியில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார் மந்தனா. இதையடுத்து முதல்முறையாக டி20 தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 3-வது இடத்தில் இருந்த மந்தனா, மெக் லேனிங்கைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 2-வது இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
அதேபோல ஒருநாள் தரவரிசையில் 7-ம் இடத்துக்கு மந்தனா முன்னேறியுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தார். இதனால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கெளர் 9-வது இடத்தில் உள்ளார்.
சச்சினின் 100 சதங்களை கோலி தாண்டுவாரா? பாண்டிங் பதில்
சச்சினின் 100 சர்வதேச சதங்களை விராட் கோலி தாண்டுவது குறித்த கேள்விக்கு ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்டுகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் மொத்தமாக 100 சதங்களை எடுத்துள்ளார். இந்தச் சாதனையை எந்த வீரராலும் தொட முடியாது என ரசிகர்கள் எண்ணுகிறார்கள். இந்தியாவின் விராட் கோலியும் ஓய்வு பெற்ற ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் தலா 71 சதங்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி 100 சதங்களை எடுப்பாரா என்கிற கேள்விக்கு ரிக்கி பாண்டிங் கூறியதாவது., மூன்று வருடங்களுக்கு முன்பு, சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி தாண்டுவாரா எனக் கேட்டிருந்தால் ஆமாம் எனப் பதில் சொல்லியிருப்பேன். கோலி இன்னும் பல வருடங்கள் விளையாடப் போகிறார். இன்னும் 30 சதங்கள் எடுக்க வேண்டும் என்பது கடினமான இலக்கு. அதேசமயம் விராட் கோலியால் எதுவும் முடியாது என நான் சொல்ல மாட்டேன். நன்கு விளையாட ஆரம்பித்து விட்டால், அவர் எந்தளவுக்குப் பசியுடன் இருக்கிறார், சாதிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரியும் என்றார்.
டிரா செய்த பிரக்ஞானந்தா: கைதட்டி பாராட்டிய கார்ல்சன்
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இணையம் வழியாக செப்டம்பர் 25 வரை இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 16 வீரர்களிலிருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.
முதல் நாளன்று இந்தியாவின் பிரக்ஞானந்தா - இவான்சுக், டுடா, ஜெல்ஃபண்ட் என மூன்று பிரபல வீரர்களை வீழ்த்தினார். எனினும் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டோபர் யூவிடம் தோற்றார். முதல் நாள் முடிவில் கார்ல்சன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பிரக்ஞானந்தா, இவான்சுக், ஹான்ஸ் நீமன், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 9 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் இருந்தார்கள்.2-வது நாளன்று அனைவரும் எதிர்பார்த்த கார்ல்சனுடனான ஆட்டத்தை டிரா செய்தார் பிரக்ஞானந்தா. கடைசி வரை கடுமையாகப் போராடிய பிரக்ஞானந்தாவுக்கு இறுதியில் கைத்தட்டிப் பாராட்டு தெரிவித்தார் கார்ல்சன். இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
ஏலத்தில் யாரும் சீந்தாத தெ.ஆ. டி20 உலகக் கோப்பை கேப்டன்
2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். தெ.ஆ. டி20 லீக் போட்டியின் தலைவராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செயல்படுவார். தெ.ஆ. டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். அவர்களில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டனாகச் செயல்படவுள்ள டெம்பா பவுமாவை வீரர்களின் ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதேபோல தெ.ஆ. டெஸ்ட் கேப்டன் டீன் எல்கரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. ஏலத்தில் பவுமாவின் அடிப்படை விலையாக ரூ. 38.25 லட்சமும் எல்கரின் அடிப்படை விலையாக ரூ. 7.87 லட்சமும் இருந்தன. எனினும் எந்த அணியும் இருவரையும் சீந்தவில்லை. தென்னாப்பிரிக்கா புதிதாக ஆரம்பித்துள்ள டி20 லீக் போட்டியில் தெ.ஆ. அணியின் டி20 உலகக் கோப்பை கேப்டனுக்கே இடமில்லை என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு விமர்சனங்களையும் வரவழைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026 -
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Jan 2026சென்னை, தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்
01 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
-
தமிழ்நாட்டில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது எப்பொழுது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
01 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jan 2026சென்னை, ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வ
-
தி.மு.க.வுக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி பேட்டி
01 Jan 2026சென்னை, தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வல
-
வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் சிகரெட் விலை வரும் பிப்.1 முதல் புதிய வரி அமல்
01 Jan 2026புதுடெல்லி, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
-
உலகம் அழியும் என கூறிய கானாவை சேரந்தவர் கைது
01 Jan 2026கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு தாக்கல்
01 Jan 2026சென்னை, அ.தி.மு.க.
-
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
01 Jan 2026சென்னை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் நேற்று திரண்டனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Jan 2026சென்னை, கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.;
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் வழித்தடம் எது? மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்
01 Jan 2026புதுடெல்லி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொல்கத்தா – கவுகாத்தி இடையே இயக்கப்பட உள்ளது.
-
நாட்டில் 2027-ல் புல்லட் ரயில் சேவை தொடங்கும்: மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்
01 Jan 2026புதுடெல்லி, நாட்டில், முதல் புல்லட் ரயில் சேவையானது வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து
-
போரை நிறுத்தவே விருப்பம்; ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை
01 Jan 2026கீவ், நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை
-
ராகுல் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் கிடைக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா-பாகிஸ்தான் தொடர்ந்து 35 - வது ஆண்டாக பரிமாற்றம்
01 Jan 2026புதுடெல்லி, இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.தொடர்ந்து 35-வது ஆண்டாக பரஸ்பரம் பட்டியல் பகி
-
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: மாநகர காவல் துறை அறிவிப்பு
01 Jan 2026சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
சென்னையில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
01 Jan 2026சென்னை, சென்னையில் 7-வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Jan 2026சென்னை, 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞ
-
சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் வெடிவிபத்து; பலர் பலி..!
01 Jan 2026பெர்ன், சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக
-
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது
01 Jan 2026சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
-
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் அதிபர் புதின் சூளுரை
01 Jan 2026மாஸ்கோ, உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
-
கேரளாவில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உறுதி
01 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் துணை ஜனாதிபதி நேரில் சந்திப்பு
01 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.



