முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எட்., படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு துவங்கியது : அக். 6-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியீடு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
B Ed  -Graduation 2022--09-2

Source: provided

சென்னை : அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., பட்டப் படிப்பு மாணவ சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று முதல் தொடங்கியது. 

அதன்படி, நேற்று முதல் (24.09.2022) அக்டோபர் 3-ம் தேதி(03.10.2022) வரை பி.எட்., பட்டப் படிப்புக்கான விண்ணபங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம். அக்டோபர் 6-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அக்டோபர் 12ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பி.எட்., பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுகளை கல்லூரிக் கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட்., மாணவர் சேர்க்கையில் 69சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட்., படிப்பில் சேர https://tngasaedu.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சுயநிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, அந்தந்த கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://tngasaedu.in/ என்கிற இணையதளத்தைப் பாருங்கள். இது தொடர்பான சந்தேகங்களுக்கு : 044-28260098 ; 044-28271911 என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம். இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., பட்டப் படிப்பு மாணவ சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 3-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து