முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அளவில் புதிய கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை செய்ய நிதிஷ் குமார் மற்றும் லல்லு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      இந்தியா
Nithiskumar 2022-09-25

Source: provided

 புது டெல்லி: தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் இணைவு பற்றி விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் ஆகியோர் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். 

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிக்கான கூட்டணியை ஒன்றிணைக்கும் தீவிர பணியில் பீகார் முதல்வர்  நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் டெல்லி சென்ற அவர், பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். பீகாரில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராகி உள்ளார். 

இந்த நிலையில், நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசு முடிவு செய்துள்ளனர். 

இந்த சந்திப்பில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது தவிர்த்து வேறு சில விசயங்களும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு வெற்றி பெற்று விட்டால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி விரைவுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து