முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம் : பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
petrol-desal-2022-08-29

Source: provided

சென்னை : தமிழகத்தில் கடந்த 3 நாள்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக, தமிழகம்  முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதித்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதை அடுத்து பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் கோவை குனியமுத்தூா், ஒப்பணக்கார வீதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், சேலம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடா்ந்து, மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  இந்த நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாவட்டங்களில் உள்ள  பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு பெட்ரோல் பங்குகளில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என  சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மேலும், அவ்வாறு கேன், பாட்டில்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.   இந்நிலையில், காவல் துறை அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.  

அதன்படி, பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் போட வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் போடப்படும். வாகனங்கள் தவிர உதிரியாக எந்தவொரு கேன்களிலோ, பாட்டில்களிலோ சில்லரையாக பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து