முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழகத்தை கண்டு மகிழ்வோம் நிகழ்ச்சி: அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
Mathivendan 2022-09-27

Source: provided

சென்னை: நேற்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022 என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தலங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரசித்திபெற்ற 10 சமூக ஊடகவியலாளர்களுக்கு சுற்றுலா விளம்பர பொருட்கள் மற்றும் சுற்றுலா கையேடுகளை வழங்கி, சமூக ஊடகவியலாளர்கள் செல்லக்கூடிய சுற்றுலா வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த (மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரகாண்ட், டெல்லி, ஒடியா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா) சமூக ஊடகங்களில் பிரபலமான 10 சமூக ஊடகவியலாளர்கள் ஜவ்வாது மலை, ஒகேனக்கல், கொல்லிமலை, பூச்சமருதூர் (கோவை), சேத்துமடை, வால்பாறை, கோயமுத்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இதன்மூலம் இச்சுற்றுலாத்தலங்கள் பிரபலமடைந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகைதர வழிவகுக்கும் என்று அமைச்சர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர்   டாக்டர் சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் புஷ்பராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பொது மேலாளர் பாரதி தேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து