முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஃப்.ஐ. தொடர்புடைய இடங்களில் சோதனை: 8 மாநிலங்களில் 247 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      இந்தியா
Popular-2022 09 27

8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று 2-வது முறையாக என்.ஐ.ஏ நடத்தி சோதனையில் இதுவரை 247 பேர் கைது செய்யப்பட்டனர். 

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.

ஆபரேஷன் ஆக்டோபஸ் என பெயரிடப்பட்ட இந்த சோதனை தமிழ்நாடு, கேரளா உள்பட 15 மாநிலங்களில் 93 இடங்களில் நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் ஆயுதங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், சோதனையின் முடிவில் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கேரளாவில் 22 பேரும், தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 'ஆபரேஷன் ஆக்டோபஸ் 2.0' நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் 2-வது முறையாக நேற்று ரெய்டு நடைபெற்றது. மாநில போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ தொடர்புடைய இடங்களில் மாநில போலீசார் மற்றும் என்.ஐ.ஏ நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ. அளித்த தரவுகளின் அடிப்படையில் மாநில பயங்கரவாத தடுப்பு போலீசார் இந்த சோதனையை நடத்தினர்.

8 மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி ஜாமியா நகரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 17-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து