முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்களில் இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
bus-2022 08 25

Source: provided

சென்னை : தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்களில் இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் நெரிசலின்றி பொதுமக்கள் பயணிக்கும் வகையில் இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் அடுத்த (அக்டோபர்) மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பெரும்பாலான அரசு ஊழியர்கள், மாணவர்கள்,உள்ளிட்டோர், இடையில் இருக்கும் திங்கள்கிழமை (அக்.3) ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, நேற்று முதலே பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் நெரிசலின்றி பொதுமக்கள் பயணிக்கும் வகையில் இன்றும், (அக்.1) சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 2,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதே போல் பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகையைக் கொண்டாட அரசு பஸ்களில் ஊர்களுக்குச் செல்ல செப்.30, அக்.1,2 ஆகிய நாள்களில் 48 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதே நேரம் வழக்கமாக விழாக்காலங்களில் இயக்கப்படுவது போல் சென்னை, கோயம்பேட்டில் இருந்து செல்லும் சில ஊர்களுக்கான பஸ்கள், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து