முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் இந்து கோவில் திறப்பு: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      உலகம்
Dubai 2022--10-05

Source: provided

துபாய் :  துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின் சகிப்புத்தன்மைத் துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் திறந்து வைத்தார். 

இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். இதை புதுப்பிக்கும் நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோயில் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் துபாய் வாழ் இந்தியர்களின் 10 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் உட்புறத்தில் 16 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அனைத்து மதத்தினர் வழிபாடு நடத்தவும், மற்றும் பிற பார்வையாளர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலின் தூண்கள் மற்றும் முகப்பு பகுதி அரபு மற்றும் இந்து முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை மண்டபத்தில் இளம் சிவப்பு தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான மணிகளும் அங்கு தொங்க விடப்பட்டுள்ளன. இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கிறது மற்றும் வழிபாட்டாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு நுழைவதற்கும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

தினசரி அடிப்படையில் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம். துபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கூட்ட நெரிச்லை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து