முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தர்காண்டில் பயங்கரம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழப்பு : ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      இந்தியா
Modi 2022 09 08

Source: provided

டேராடூன் : உத்தர்காண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர். அந்தப் பேருந்தில் 3 குழந்தைகள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் இருந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்து விபத்து குறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது., உத்தர்காண்டின் பவுரி கார்வால் மாவட்டத்தில் கல்யாண கோஷ்டி ஒன்றுடன் சென்ற பேருந்து ரிக்னிகால் பிரோகால் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது 500 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி அசோக் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் விபத்துப் பகுதியில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புக் குழுவின் 4 கம்பெனிகள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார். முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் கிராமவாசிகள் உதவி செய்துள்ளனர் என்றார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்ததாவது, " உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்." என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து