முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் கிராம் ரூ.57 அதிகரிப்பு: தங்கம் விலை அதிரடியாக உயர்வு

புதன்கிழமை, 9 நவம்பர் 2022      வர்த்தகம்
Gold 2022--10-05

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது. கிராம் ரூ.4,758-ல் இருந்து ரூ.4,815 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் கிராம் ரூ.57 அதிகரித்து உள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் பவுன் ரூ.38,064 ஆக இருந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.38,520 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் பவுன் ரூ.456 கூடி உள்ளது.

கிராம் ரூ.4,758-ல் இருந்து ரூ.4,815 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் கிராம் ரூ.57 அதிகரித்து உள்ளது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ.66.70-ல் இருந்து ரூ.67.40 ஆகவும் கிலோ ரூ.66,700ல் இருந்து ரூ.67,400 ஆகவும் உயர்ந்து உள்ளது. தங்கம் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து