முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு: ஐபோன் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      உலகம்
China 2022 11 23

கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். 

கொரோனா பரவலை தடுப்பதற்காக பாக்ஸ்கான் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த காவலர்களை தள்ளி விட்டு வெளியே வந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டு கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஊதியமும் முறையாக வழங்கவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது. 

போராட்டத்தை அடுத்து தொழிற்சாலைக்கு விரைந்து வந்த கலவரத் தடுப்பு போலீசார் கிளர்ச்சியை ஒடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸ் தாக்குதலில் ஏராளமான தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 சீனாவில் ஜென்ஜவ் நகரில் உள்ள ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் ஆலையில் 2 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தொழிலாளர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளதால் ஜென்ஜவ் பாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 14 மாடல் உற்பத்தி முடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து