முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10, 11, 12-ம் வகுப்பை சேர்ந்த பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சுண்டல் வழங்க ஏற்பாடு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Sundal 2022 11 23

Source: provided

சென்னை : சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுண்டல் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது கல்விதுறை.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். டிசம்பர் 2-வது வாரம் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. அதற்குள் அனைத்து பாட திட்டங்களையும் நடத்தி முடிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மேலும் பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு ஒரு மணி நேரம் தினமும் நடைபெறுகிறது.

சென்னையில் 35 அரசு மற்றும் மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரம் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு தொடர்ந்து நடந்து வருகின்றன. வழக்கமான வகுப்புகள் மாலை 4 மணிக்கு முடிந்தவுடன் சிறப்பு வகுப்புகள் ஒரு மணி நேரம் நடத்தப்படுகிறது. 

சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் சோர்வடையாமல் பாடங்களை படிக்க இடைவேளை விடப்பட்டு ஊட்டச் சத்து நிறைந்த கருப்பு, வெள்ளை நிற சுண்டல், பச்சை பயிறு போன்றவை வழங்கப்படுகிறது. மாலை நேரத்தில் இவ்வகை திண்பண்டங்கள் வழங்கப் படுவதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் படிக்கிறார்கள்.

சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு இவ்வகை உணவை இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வழங்கி வருகிறது. இதுபோல தன்னார்வர்கள், சமூக, மத அமைப்புகளும் இதற்கான செலவினத்தை ஏற்க முன் வரலாம் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார். பொதுத் தேர்வு தொடங்கும் வரை இந்த சத்துணவு வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து