முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்ஜினியரிங் படிப்பில் அரியர் வைத்தவர்களுக்கு சிறப்பு தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
Anna-University

Source: provided

சென்னை: பொறியியல் படிப்பில் அரியர் வைத்தவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்திருந்தாலும் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வோடு எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2001-2002-ம் கல்வியாண்டில் 3-வது செமஸ்டரிலிருந்தும், 2002-2003-ம் கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து இறுதி செமஸ்டர் வரை அரியர் வைத்தவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலுத்தி www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவ.23-ம் தேதி முதல் டிச.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து