முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர கொரோனா கட்டுப்பாடுகள்: சீன அதிபருக்கு எதிராக பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      உலகம்
China-Corona 2022-11-27

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள உயரமான ஒரு கட்டிடத்தில் கடந்த வியாழனன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கட்டிடம் பகுதியளவு பூட்டப்பட்டதால் உள்ளே இருந்தவர்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

அரசின் அதீத கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் ஷாங்காய், உரும்கி உள்பட சீனாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது, கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக, அதிபர் ஜி ஜின்பிங் ஒழிக என்றும் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து