முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Mettur dam 2022-08-02

Source: reuters

சேலம் ; காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,511 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,051 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் மாலை 119.55 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை 119.38அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 92.48 டி.எம்.சியாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து