முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

83 நாளை எட்டிய ராகுலின் ஒற்றுமை நடைப் பயணம்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      அரசியல்
Rahul 2022 11 22

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நேற்று உஜ்ஜைன் நகருக்குள் நுழைந்தது. அவரது நடைப் பயணம் 83 நாளை எட்டியுள்ளது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகாகாளேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயிலில் நேற்று வழிபாடு நடத்துகிறார். பிறகு அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று ராகுல் காந்தி உரையாற்றினார்.

உஜ்ஜைன் நகருக்குள் ஒற்றுமை நடைப்பயணம் நுழைந்த போது, அங்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  நடைப்பயணத்தின் 83-வது நாளான நேற்று நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து கொண்டனர். நேற்று முற்பகலில் நடைப்பயணம் முடிந்ததும், ஸ்ரீ மகாவீர் தபோபூமி மற்றும் மகாகாளேஷ்வர் கோயிலில் வழிபாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் ராகுல் பங்கேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து