முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரித்விஷா மீது காம்பீர் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      விளையாட்டு
Gautam-Gambhir 2022-11-29

Source: provided

ஒருநாள் அணிக்கு மட்டும் ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டி-20 அணிக்கு பிசிசிஐ யாரை கேப்டனாக நியமிக்கும் என்ற கேள்விக்கு தற்போது கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது., கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், ஒருசில தொடர்களில், ஐபிஎலில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்ததை வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க கூடாது. ஐபிஎலில் கோப்பை வென்று கொடுத்தார் என்று கூறிதான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை கொடுத்தோம். இப்போது புது கேப்டனை தேடுகிறோம்.

என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான். இவரைத்தான் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். இவர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே தொடர், ரஞ்சிக் கோப்பை தொடர்களில் ஆக்ரோஷமாக கேப்டன்ஸி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். வெற்றிகரமான கேப்டனாகவும் இவர் இருக்கிறார். இவர் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட பொருத்தமான வீரர். இவ்வாறு கம்பீர் கூறினார்.2019-ம் ஆண்டில் பிரித்வி ஷா 6 மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

________________

மெஸ்சிக்கு மிரட்டல் விடுத்த மெக்சிகோ பாக்சர்

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோவிற்கு எதிராக களம் இறங்கியது. இதில் வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற முடியும் என நிலையில் அர்ஜென்டினா 2-0 என மெக்சிகோவை வீழ்த்தியது.

இந்த போட்டி முடிந்த பின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்களது அறையில் வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது மெக்சிகோ வீரர் அணியும் ஜெர்சிக்கு மேல் அர்ஜென்டினா வீரர்கள் குதிப்பது போன்றும், மெஸ்சி ஜெர்சியை காலால் மிதித்துக் கொண்டிருப்பது போலவும், ஜெர்சியால் அறையை க்ளீன் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகின. இது மெக்சிகோ நாட்டின் குத்துச் சண்டை வீரர் கனாலோ அல்வாரேஸ்-க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ''நம்முடைய ஜெர்சி மற்றும் தேசியக்கொடியால் அறையை மெஸ்சி சுத்தம் செய்வதை பார்த்தீர்களா? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், ''நான் மெஸ்சியை பார்த்துவிடக் கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டால் அவருக்கு நன்றாக இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

________________

டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனாக டி காக் நியமனம்

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி.டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா (இலங்கை), மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட முன்னணி வீரர்களை வைத்துள்ளது. இந்த அணிக்கு டுபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

________________

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வார்னர், ஸ்மித், லயான், ஸ்டார்க், ஹேஸ்லேவுட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி விவரம்: உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸ்லேவுட், நாதன் லயான். இந்திய நேரப்படி இன்று காலை 7.50 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

________________

அக்ரம் குற்றச்சாட்டு: சலீம் மாலிக் பதில்

வாசிம் அக்ரமின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வாசிம் அக்ரமின் குற்றச்சாட்டிற்கு சலீம் மாலிக் பதில் அளித்துள்ளார். சலீம் மாலிக் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:- அவருடைய கருத்துகள் மற்றும் எந்த அர்த்தத்தில் அவர் அதை எழுதினார் என்பதைப் பற்றிய அவரது பார்வையை நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தான் அணி தொடர்களில் விளையாட செல்லும்போது அங்கு சலவை மெசின் பயன்படுத்தப்படும். நாங்கள் யாரும் கைகளால் துணிகளை துவைப்பது கிடையாது.

நான் அவரிடம் இதுகுறித்து இன்றும் பேசவில்லை. அந்த புத்தகத்தையும் படிக்கவில்லை. அதனால் அதுகுறித்து முழுமையாக கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஒரு சகாக்கள். இணைந்து நேரத்தை செலவழித்துள்ளோம். ஆகவே, நான் எந்தவிதமாக சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், எனது தலைமையின் கீழ் அவர் எப்படி அறிமுகம் ஆகியிருக்க முடியும்?. நான் ஏன் அவரை பந்து வீச அனுமதிக்க வேண்டும்.துணி துவைப்பு, மசாஜ் செய்வது குறித்து அவரை பேசியது, அவர் அவரையே அவமதித்துள்ளார். இவ்வாறு சலீம் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து