எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டாக்கா : வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்துள்ளது. அதற்கு முன்பு வங்கதேச ஏ அணி 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சுற்றுப்பயணம்...
டிசம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. 2-வது டெஸ்ட் டிசம்பர் 6 அன்று தொடங்குகிறது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
112 ரன்களுக்கு...
காக்ஸ் பஸாரில் தொடங்கிய முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணி சிறப்பாகப் பந்துவீசியதால் முதல் 5 விக்கெட்டுகள் 26 ரன்களுக்கு வீழ்ந்தன. இதன்பிறகு மொசாடெக் ஹுசைன் பொறுப்பாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். எனினும் வங்கதேச ஏ அணி, 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம்பெற முடியாமல் போனால் அவருக்குப் பதிலாக விளையாடவுள்ள 29 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செளரப் குமார் 4 விக்கெட்டுகளையும் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
8 ரன்கள் முன்னிலை...
இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் வலுவாகத் தொடங்கியுள்ளது. முதல் நாள் முடிவில் இந்திய ஏ அணி விக்கெட் இழப்பின்றி 36 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்துள்ளது. யாஷஸ்வி ஜெயிஸ்வால் 61 ரன்களும் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 53 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். இந்திய ஏ அணி முதல் நாளன்றே முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் மீதமுள்ள நிலையில் 8 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025