முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களின் பணப்பலன்களுக்குரிய காசோலைகள் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      தமிழகம்
Sivasankar 2022-12-01

Source: provided

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மேலும் சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மிஷன் சென்னை  என்ற திட்ட வாகனத்தையும் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2020, மே மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,241 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ. 242.67 கோடியை  வழங்கிட முதல்வர்  மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், நேற்று அமைச்சர் சிவசங்கர்,  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 22 விருப்ப ஓய்வு பெற்ற,  இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார். இதையடுத்து ஏனைய 1,219 பணியாளர்களுக்கும் அந்தந்தப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின்  மிஷன் சென்னை  என்ற திட்ட வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து