முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ. 40 ஆயிரத்தை தாண்டியது

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      வர்த்தகம்
Gold 2022--10-05

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 40,080 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்படி, கிராமுக்கு ரூ. 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது. தங்கம் விலை அதிகரிப்பால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதே போல், வெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து