முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் காலமானார்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      சினிமா
Hari-Vairavan 2022 12 03

வெண்ணிலா கபடி குழு திரைப்படப் புகழ் நடிகர் ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் நடிகர் ஹரிவைரவன். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் உயிரிழந்ததாக நடிகர் அம்பானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் ஹரி வைரவன்  இறைவனடி சேர்ந்தார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்று அம்பானி சங்கர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

மதுரையை சேர்ந்த ஹரிவைரவன் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் நடிகர் ஹரி வைரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து