முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: தெலுங்கானா முதல்வர் மகளுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      இந்தியா
Kavita 2022 12 03

Source: provided

புதுடெல்லி  டெல்லி மதுபான முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், இவ்வழக்கு குறித்து விசாரிக்க தெலுங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி மதுபான முறைகேடு வழக்கு தொடா்பாக வரும் 12-ம் தேதி காலை 11 மணியளவில் விசாரணை மேற்கொள்ள வசதியாக, அவரது வசிப்பிடம் குறித்தான தகவலைத் தெரிவிக்குமாறு சி.பி.ஐ. தரப்பில் கவிதாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இதையடுத்து, ஐதராபாதில் உள்ள தன்னுடைய வீட்டிலேயே அதிகாரிகள் சந்திக்கலாம் என சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அவா் பதிலளித்துள்ளார். 

முன்னதாக, அமலாக்கத் துறை சாா்பில் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விசாரணை அறிக்கையில் கவிதாவின் பெயா் இடம்பெற்றிருந்த நிலையில், எத்தகைய விசாரணையையும் எதிா்கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து