முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிராத்வேட் அசத்தல் சதம் : 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 192 ரன்கள் குவிப்பு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      விளையாட்டு
West-Indies 2022-12-03

Source: provided

பெர்த் : ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 30-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் 598 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்சில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணி 315 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 182 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 498 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்ஸ் விளையாடியது. பிராத்வேட் - சந்தர்பால் ஜோடி நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. சந்தர்பால் 45 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ப்ரோக்ஸ் 11 ரன்னிலும் பிளாக்வுட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய பிராத்வேட் சதம் அடித்து அசத்தினார். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து உள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் 306 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து