எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தை சமாளிக்க 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல், தமிழகத்தின் கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரது அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாண்டஸ் புயல் சின்னம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடந்த 8-ம் தேதி அன்று பல்வேறு துறை அலுவர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தி அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிப்பிற்குள்ளாகும் என கருதப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 882 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் அலுவலர்களுடன் இயங்குகின்றன. 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றது.
மேலும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கவும் போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிருவாக அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கான அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்யக் கூடாதவை
நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டிடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


