முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்தது

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2022      இந்தியா
Bihar- 2022 12 18

Source: provided

பெகுசாய் : பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்தது பீகார் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளமுள்ள பாலம் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாலத்திற்கான கட்டுமானப் பணி தொடங்கி, 2017 இல் முடிவடைந்தது. ஆனால், முதல்வரின் நபார்டு வங்கித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம், அணுகுசாலை இல்லாததால் பாலம் திறக்கப்படாமல் இருந்து வந்தது. 

சமீபத்தில் பாலத்தின் முன்பகுதியில் விரிசல் காணப்பட்டது, அதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை பாலத்தின் முன்பகுதி இடிந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. சாஹேப்பூர் கமால் காவல் நிலையப் பகுதியின் அஹோக் கந்தக் காட் பகுதியிலிருந்து ஆக்ரிதி தோலா சௌகி மற்றும் பிஷன்பூர் இடையே பாலம் கட்டப்பட்டது.

முதல்வரின் நபார்டு வங்கித் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்து விழுந்தது பீகார் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து