முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயமில்லாமல் நடித்தேன் - ஆர்.ஜே.பாலாஜி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      சினிமா
RJ-Balaji 2023 01 21

Source: provided

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படம் ரன் பேபி ரன். பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரிப்பில், ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி,  இந்த படத்தில் 33 வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும். மேலும், அந்த காட்சி நடிக்க கயிறு பயன்படுத்தலாம் என்று கேட்டேன். இல்லை அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள் என்று இயக்குனர் சொன்னார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன். அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி, அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது. நான் அவரிடம் சார் லாரி வருகிறதே என்று கேட்டதற்கு “அதை நான் தான் அனுப்பினேன்” என சிரித்துக்கொண்டே இயக்குனர் வேலை வாங்கிவிட்டார் என்றார்.,  மேலும், சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது என்றார். பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை செய்யாமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து