எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை தெப்பத்திருவிழா விமரிசை யாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று (24-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் கொடிமரம் முன்பு சிம்ம வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் ஓத அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டினர். தொடர்ந்து தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு சிம்ம வாகனத்தில் அம்மனும், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வந்தார். 4-ந் தேதி வரை நடக்கும் 12 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் அன்னம், பூதம், காமதேனு, கைலாச பர்வதம், தங்கக்குதிரை, ரிஷப வாகனம், யாழி, நந்திகேசுவரர் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
விழாவில் 8ம் நாளான வருகிற 31-ந்தேதி காலை 9 மணிக்கு தங்க பல்லக்குகளில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் சித்திரை வீதி, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம், மகபூப்பாளையம் வழியாக வலைவீசி தெப்பக்குளத்தில் எழுந்தருளுகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தை தெப்ப உற்சவம் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணியளவில் வெள்ளி அவுதா தொட்டில் அம்மனும், சிம்ம வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளுகின்றனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகின்றனர். அதன் பின் தண்ணீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் தெப்ப உற்வசம் நடக்கிறது.
தெப்பத்தை சுவாமி-அம்பாள் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இங்கு மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்பின் இரவு சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புவார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
72 குண்டுகள் முழங்க இ. கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசு சார்பில் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்
26 Feb 2026சென்னை, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.
-
ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு
27 Feb 2026பகிர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் பங்குச் சந்தைகள் நேற்று (பிப். 27) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றுள்ளன.
-
எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தென்கொரியாவை அழிப்போம்: வடகொரியா தலைவர் எச்சரிக்கை
27 Feb 2026பியாங்யாங், தென்கொரியா எங்களின் தீராத எதிரி நாடு. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இனி எதுவுமே இல்லை. ஒரே நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
27 Feb 2026பென்னாகரம், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்த ஓ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. கண்டனம்
27 Feb 2026சென்னை, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க.
-
பாகிஸ்தான் குண்டுமழை.. ஆப்கானிஸ்தானில் 133 பேர் பலி
27 Feb 2026லாகூர், தாலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது இதில் 133 பேர் க
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
27 Feb 2026மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியிலிருந்து 87.79 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
-
5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தில் நிலநடுக்கம்
27 Feb 2026டாக்கா, வங்கதேச நாட்டில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்யா செல்கிறார் பாக். பிரதமர்
27 Feb 2026லாகூர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷ்யாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: வாபஸ் பெற்றார் ராமதாஸ்
27 Feb 2026சென்னை, மாம்பழ சின்னம் தொடர்பாக அன்புமணி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
-
நேபாள பொதுத் தேர்தல்: 3 நாட்கள் இந்திய எல்லை மூடல்
27 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், மார்ச் 2 முதல் 3 நாள்களுக்கு இந்திய-நேபாள எல்லை மூடப்படுகிறது.
-
போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.- ஆப்கானிஸ்தானுக்கு சீனா அழைப்பு
27 Feb 2026பெய்ஜிங், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.


