முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8-ம் வகுப்பு புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆா்.டி.

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2026      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆா்.டி.) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், தவறுக்காக என்.சி.இ.ஆா்.டி. வருந்தி மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆா்.டி.) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்த் தலைமை நீதிபதி சூா்ய காந்த் புதன்கிழமை கடும் ஆட்சேபம் தெரிவித்தாா்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூா்ய காந்த், 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு புதன்கிழமை கடும் ஆட்சேபம் தெரிவித்தாா். இந்த விவகாரத்தை இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன். நீதித் துறை மற்றும் அதன் நோ்மையை அவமதிக்க உலகில் யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்ன விலை கொடுத்தேனும் தடுப்பேன். சட்டம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டுமென எனக்குத் தெரியும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்த் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், தவறுக்காக என்.சி.இ.ஆா்.டி. வருந்தி மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.என்.சி.இ.ஆா்.டி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலைப் பெற்றபோது, அதில் 'சமுதாயத்தில் நீதித் துறையின் பங்கு' என்ற தலைப்பு கொண்ட பாடப் பிரிவில் சில தகாத உரை இருப்பது கண்டறியப்பட்டது. இதே கருத்தை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்தது. பின்னா், அந்த நூலின் விநியோகத்தை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று அந்தத் துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு இணங்கி, அந்த நூலின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

நீதித் துறை மீது என்.சி.இ.ஆா்.டி. மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை நிலைநாட்டி, அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் நீதித் துறை திகழ்கிறது என்றே என்.சி.இ.ஆா்.டி. கருதுகிறது. நூலில் சில தகாத கருத்துகள் இடம்பெற்றது உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்படவில்லை. முற்றிலும் தற்செயலானதாகும்.

அந்தப் பாடப் பிரிவு உரிய ஆலோசனைகளுடன் மாற்றியமைக்கப்பட்டு மாணவா்களுக்கு புதிய நூல் வழங்கப்படும். இந்தத் தவறுக்காக என்.சி.இ.ஆா்.டி. வருந்தி மன்னிப்பு கோருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடப்புத்தகங்களின் நோக்கம் மாணவர்களிடையே அரசியலமைப்பு கல்வியறிவு, நீதித் துறை மதிப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு குறித்த தகவலறிந்த புரிதலை வலுப்படுத்துவதாகும்.

"எந்தவொரு அரசியலமைப்பு அமைப்பின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கவோ அல்லது குறைக்கவோ எந்த நோக்கமும் இல்லை. அதன் தொடர்ச்சியான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, என்.சி.இ.ஆா்.டி. ஆக்கபூர்வமான கருத்துகளுக்காக காத்திருக்கிறது. மேலும், 2026-27 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டு புதிய நூல் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து