முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2026      இந்தியா
EarthQuake-2023-04-03

காங்டாக், சிக்கிம் மாநிலத்தில், அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்தில், வியாழக்கிழமை (பிப். 26) பிற்பகல் 11.24 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மதியம் 12.17 மணியளவில் தலைநகர் கேங்டாகிலிருந்து 11 கி.மீ. வடமேற்கில் 10 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களிலும் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் உள்ளூர்வாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக, ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் மிகவும் ஆபத்தானவை எனக் கருதப்படும் நிலையில், இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களால் பின்அதிர்வுகள் உருவாகக் கூடும் என அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து