முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாளிகப்புரம் விமர்சனம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      சினிமா
Malikapuram-review 2023 01

Source: provided

மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல். கதை, சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார் அதனால், தோழன் ஸ்ரீபத்துடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்படுகிறார் சிறுமி தேவநந்தா. அந்தப் பயணத்தில் அவர்களை ஆபத்து சூழ்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதைச் சொல்லியிருக்கும் படம் தான் மாளிகப்புரம். சிறுமி தேவநந்தா அந்த வேடத்துக்கு முழுநியாயம் செய்துள்ளார். வெள்ளந்திச் சிரிப்புடன் இருக்கும் அவருக்கு ஏற்படும் அளவுக்கு மீறிய சோகத்தையும் முகத்தில் காட்டிக் கலங்க வைக்கிறார் உடன் வரும் சிறுவன் ஸ்ரீபத்,  நாயகன் உன்னி முகுந்தன் கறுப்பு உடை, திடகாத்திர தேகம், அழகான சிரிப்புடன் வலம் வருகிறார். சண்டைக்காட்சிகளில் அவர் காட்டும் வேகம் வியப்பு. தொடக்கத்தில் ஒரு சாதாரண பக்தர் போல் வந்து சாகசம் செய்கிறார். இறுதியில் அவர் யார் எனத் தெரியும்போது எல்லாம் பொருத்தமாக அமைந்துவிடுகிறது. நடிகர் சம்பத்ராம் வில்லனாக வந்து கண்களாலேயே மிரட்டியிருக்கிறார். திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை என்ற சொல்லுக்கேற்ப திரைக்கதை அமைத்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர், 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து