முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன்: டிரம்ப்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      உலகம்
Trump 2023 01 30

Source: provided

கொலம்பியா : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் கொலம்பியாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் அமெரிக்க வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அமெரிக்க எதிர்கட்சியான குடியரசு கட்சி இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டது. கடந்த முறை குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், இந்த முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது பிரசாரம் சூடுபிடிக்கவில்லை என்றும், மிக மெதுவாகவே அவரது பிரசாரம் நடப்பதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் கொலம்பியாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, தான் மிகவும் கோபமாக இருப்பதாக கூறினார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை மீட்டெடுக்கும் முயற்சியில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதற்கான பிரசாரத்தில் இறங்கி விட்டேன் எனவும் தெரிவித்தார். அவரது பேச்சு மூலம் வருகிற தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து