முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      தமிழகம்
Students 2023 01 21

சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அப்பணி நாளை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் இன்று (04-02-2023) அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்படும் என தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து