முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கைக்கு விலக்கு: சீனா உறுதி

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      உலகம்
Sri-Lanka-China 2023 02 04

Source: provided

பெய்ஜிங் : கடன்களை திருப்பி செலுத்த இலங்கைக்கு சலுகை அளிக்க தயாராக உள்ளதாக சீனா உறுதி அளித்துள்ளது. 

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் தொகை ரூ. 4.19 லட்சம் கோடியாகும். பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு இந்தியா ரூ. 36 ஆயிரம் கோடி அவசர கால கடன் உதவி அளித்துள்ளது. 

வெளிநாட்டு கடன்களில்  ஜப்பான், ஆசிய வளர்ச்சி வங்கிக்கு அடுத்தபடியாக சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவுக்கு இலங்கை கொடுக்க வேண்டிய கடன் தொகை இதில் 10 சதவீதமாகும். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.23 ஆயிரத்து 829 கோடி அவசர கால கடன் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு கடன் மறுசீரமைப்பு பணிகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கு வங்கி கடனை திருப்பி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்துக்கு சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங்  தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து