எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். சில சுயேச்சைகள் வினோதமான முறையில் வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 5-வது நாளாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் நடைபெற்றது. அப்போது சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவாயிலில் அவரை தடுத்து நிறுத்தி இதே கோலத்தில் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினர்.
இதனையடுத்து அவர் சாதாரண உடை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்து அவர் கூறும் போது,
நான் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன். இடைத்தேர்தலில் சுயேட்சையாக பாட்டில் சின்னத்தில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளேன். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் எனது மனுவை நான் வாபஸ் பெறுவேன் என்றார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |